Business

புகை பிடிப்பதால் இதயம், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை!!! கேட்கும் திறன் குறையும் அபாயம்!!

புகை பிடிப்பதால் இதயம், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை!!!

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் கேட்கும் திறன் குறையும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கேட்கும் திறனும் பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக 50,000 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

“புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு கேட்கும் திறன் குறையும் அபாயம் அதிகமாக இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம் கேட்கும் திறனை 20 லிருந்து 60 சதவீதம் வரை பாதிக்கும். ஒலி மாசுவினால் ஏற்படுவதை விட புகைப்பழக்கம் கேட்கும் திறனை அதிக அளவில் பாதிக்கும்.

இது குறித்து பேசிய ஜப்பான் விஞ்ஞானி குயான்குயான்,

“பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின்னரே இந்த முடிவு வெளியிடப்பட்டது. புகைப்பழக்கம் கேட்கும் திறனை அதிக அளவில் பாதிக்கும் என்பதற்கு இந்த ஆராய்ச்சி முக்கிய காரணமாக அமையும். கேட்கும் திறன் முழுவதும் பாதிக்கப்படுவதற்கு முன் புகைப்பழக்கத்தை நிறுத்துவது மிக அவசியமானது” என கூறினார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top