News

புனித வெள்ளி ஊர்வலத்தின்போது பதற்றம் மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

புனித வெ மெக்சிகோவில் புனித வெள்ளி ஊர்வலத்தின்போது போலீசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.

மெக்சிகோ நாட்டின் உல்லாச நகரம், அகாபுல்கோ. அங்கு நேற்று முன்தினம் புனித வெள்ளியையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். அதில் கலந்து கொண்டவர்கள், பண்டைக்கால ரோமானியர்கள் போலவும், பைபிளில் வருகிறவர்களைப் போலவும் உடை அணிந்து இருந்தனர்.

அப்போது வழியில் ஒரு கார் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தின்போது, கொள்ளையர்களுக்கும், அவர்களைப் பிடிக்க முயற்சித்த போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதில் ஒரு கொள்ளையர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ஒருவர் தப்பி விட்டார்.

சில நிமிடங்களில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் இன்னொருவர் பலி ஆனார்.

இவ்விரு துப்பாக்கிச்சூடு சம்பவங்களாலும், புனித வெள்ளி ஊர்வலம் சென்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பலரும் ஊர்வலத்தில் இருந்து பின் வாங்கி ஓட்டம் பிடித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top