மட்டக்களப்பு விகாராதிபதியும் தெல்தெனிய போராட்டத்தில் குதிப்பு!

கண்டி, திகனயில் வன்முறைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்தின தேரர் தலைமையிலேயே தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கண்டி, திகனயில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.