மருத்துவ மனையில் ஒரே அறையில் புற்று நோயுடன் போராடும் இரு உடன் பிறப்புக்கள்!

கனடா-கியுபெக் மருத்துவ மனையில் ஒரு அரிய மற்றும் மோசமான வகை புற்று நோயால் பாதிக்கப்பட்ட இரு உடன்பிறப்புக்கள் வைத்தியசாலையில் ஒரே அறையில் அருகருகில் அனுமதிக்கப்பட்ட உயிருக்காக போராடும் காட்சி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
14-வயதுடைய ஜாக்கோப் றன்டெல் மற்றும் 5-வயதுடைய அவனது சகோதரி ஷோபியா இருவரும் ஒட்டாவா குழந்தைகள் மருத்து மனையில் ஒரே அறையை பகிரந்து கொண்டு போராடி வருகின்றனர்.
இவர்களின் அருகில் நின்றவாறு இரு குழந்தைகளின் போராட்டத்தை பார்க்கும் தாயையும் காணும் காட்சி அனைவரது இதயத்தையும் பிளக்க கூடிய ஒன்றாகும்.
இருவருக்கும் ஏற்பட்டிருப்பது ஒரு வகை இயல்பற்ற teratoid rhabdoid tumour என தெரிவிக்கப்பட்டுள்ளது. SMARCB1 எனப்படும் மரபணுவினால் ஏற்படுவதென கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கு புற்று நோய் ஏற்படுவதே கொடுமை இதில் இரண்டு பிள்ளைகள் என்றால்?