முகமாலையில் ஐ.நா சிறப்புப் பிரதிநிதி!

நிலக்கண்ணிவெடிகளுக்கு எதிரான பிரகடனத்துக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியும், ஜோர்தான் இளவரசருமான மிரேட் அல்ஹுசேன் முகமாலைக்கு இன்று பயணம் மேற்கொண்டு கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்களை பார்வையிட்டுள்ளார். குறித்த பகுதிகளுக்குச் சென்ற அவர், அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2 நாட்களாக கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெறும் இடங்களை பார்வையிட்டு வருவதாகவும், கண்ணிவெடிகள் இதுவரை அகற்றப்படாத பிரதேசங்களில், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கண்ணிவெடிகள் அகற்றப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதனும் இந்தப் பயணத்தில் பங்கேற்றிருந்தார்.