Business

மூளையின் நினைவுகளை அழித்து நோய்களை எதிர்த்துப் போராட வைக்கும் மைக்ரோ சிப்

பிரையன் ஜோன்சனுடைய கெர்னல் நிறுவனம் மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை உருவாக்கி வருகின்றது.

இந்த‌ சிப்களை வைத்து மக்கள் தமக்கு தேவையான போது நினைவுகளை வாங்கவும், அழிக்கவும் அனுமதிக்கும். பணக்காரர்களுக்கென்று மாத்திரம் ஒதுக்கப்படாமல், இந்த‌ சிப்கள் ‘ஸ்மார்ட் போன்களைப் போலவே அனைவரும்’ பெறமுடியும் என‌ பிரையன் ஜோன்சன் தெரிவித்தார்.

மனித மருத்துவ பயன்பாட்டிற்காக‌, மூளையில் பொருத்தப்படும் சாதனங்களின் முன்மாதிரிகளை கெர்னல் நிறுவனம் தற்போது செய்து வருகிறது. வலிப்பு நோயாளிகளுடன் சோதனைகள் நடத்தி நல்ல ஆரம்ப முடிவுகளை பெற்றுள்ளது.

மேலும் இந்த‌ சிப்களை பொருத்தும் தொழில் நுட்பத்தினை வ‌ணிகமயமாக்கும் நோக்கத்துடன் முன்னோக்கி செல்ல உள்ளதாகவும் , ஆரோக்கியமான மக்களிடம் சென்றடையும் முன்னர் , அல்சைமர் போன்ற மூளைச் சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவகத்தை மேம்படுத்துவதற்கு இந்த‌ சிப்கள் ப‌யன்படுத்தப்படுமென நம்புவதாக‌ பிரையன் ஜோன்சன் தெரிவிக்கிறார்.

நீங்கள் மூளையில் சேமித்த‌ நினைவுகளை அழிக்கவும் மற்றும் நோய்களை எதிர்த்து போராடவும் செய்ய‌ வைக்கின்ற‌ பிரெயின் சிப்பானது இன்னும் 15 ஆண்டுகளில் சூப்பர் ஹீரோக்களின் ஒரு புதிய இனத்தை உருவாக்க உள்ளது.

மனித மூளையில் இந்த மைக்ரோ சிப்களை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கெர்னல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top