News

மைத்திரியின் நடவடிக்கைக்கு மகிந்த அணி பாராட்டு .

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இருந்து பொருளாதார குழுவினை உடனடியாக இரத்து செய்வது தொடர்பான ஜனாதிபதியின் பணிப்புரைக்கு கூட்டு எதிர்க்கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழுவினை ரத்து செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார முகாமைத்துவ குழு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி கடுமையாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில், “பொருளாதார குழுவினை உடனடியாக இரத்து செய்வதுதொடர்பான ஜனாதிபதியின் பணிப்புரை வரவேற்கத்தக்கது. பொருளாதார குழுவினால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லையெனவும்” அவர் சுட்டிக்காட்டினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top