ரணிலுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சிக்குள் தீவிரமடையும் எதிர்ப்பு .

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் 27 உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதிக்கு முன்னதாக கட்சியில் மறுசீரமைப்பு செய்யப்படாவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 27 உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் என அவர் ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஒரு அமைச்சர் 7000 பேருக்கு நியமனங்கள் வழங்கும் போது, எமக்கு 700 பேருக்கேனும் நிமயனம் வழங்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்க வேண்டும்.
ஒன்றிரண்டு அமைச்சர்களுக்காக மட்டும் மக்கள் வாக்களிக்கவில்லை. என் நாங்கள் அர்ப்பணிக்கவில்லையா? நாம் செலவிட வில்லையா? ரங்கே பண்டாரவிற்கு வேறும் ஒருவர் மீது நம்பிக்கை கொள்ள முடியுமா? மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கட்சி மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். அரசாங்கத்தை விழச் செய்யவும் இடமளிக்க மாட்டோம் அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை மலினப்படுத்தும் அரசாங்கமொன்றுக்கு ஆதரவளிக்கவும் முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.