ரஷிய சரக்கு விமானம் விழுந்த விபத்து – பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

சிரியாவில் நடைபெற்ற விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது என ரஷிய நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இதற்கிடையே, சிரியாவின் லடாகியா மாகாணத்தில் உள்ள ஹேமிமிம் விமான படைத்தளத்திற்கு சென்ற ரஷிய விமானம் விபத்தில் சிக்கியது என ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்திகள் தெரிவிப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டன.
விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேரிட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 26 பயணிகள், 6 பணியாளர்கள் என மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர் என தெரிய வந்தது.
இந்நிலையில், சிரியாவில் நடைபெற்ற விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது என ரஷிய நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 33 பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் 6 பேர் என மொத்தம் 39 பேர் பலியாகி உள்ளனர். இந்த தகவலை அரசு உறுதிப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளனர்.