லண்டனில் குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சியளித்த நபர் கைது.

லண்டனில் குழந்தைகளுக்கு தீவிரவாதம் தொடர்பாக பயிற்சியளித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள மாராசவில் உள்ள குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சி தொடர்பாகவும், பிடிபடும் நபர்களை எப்படி கொலை செய்வது போன்ற வீடியோக்களை காண்பித்ததாக புகார் வந்தது.
இதையடுத்து பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் உமர் என்ற நபர் சிக்கியுள்ளான். சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் அவனது வீட்டை சோதனை மேற்கொண்ட போது, வீட்டில் தீவிரவாத பயிற்சிகள் தொடர்பான புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் உடனடியாக கைது செய்த அவனை, பொலிசார் ஓல்டு பேய்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.