News

லண்டன் விமானநிலையத்திற்கு வெளியில் பற்றி எரிந்த பேருந்து: வெளியேற்றப்பட்ட பயணிகள் .

லண்டனில் விமானநிலையத்திற்கு வெளியே பேருந்து பற்றி எரிந்ததில் அங்கிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Essex பகுதியில் உள்ள Stansted விமானநிலையத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்த பயணிகளை கார் பார்கிங் பகுதிக்கு அழைத்து வரும் பேருந்து திடீரென்று பற்றி எரிந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சில பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த தீ விபத்தின் காரணமாக தற்சமயம் தீ விபத்து ஏற்பட்ட பகுதி மூடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என விமானநிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பற்றி எரிந்த பேருந்தை விமானநிலையத்தில் இருக்கும் தீயணைப்பு படையினர் அணைக்க முயற்ச்சி செய்து வருகின்றனர்.

இந்த விபத்தின் காரணமாக பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. v>

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top