வடக்கு மாகாண ஆளுநராக லோகேஸ்வரன் நியமனம் .

மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். லோகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடக்கு மாகாணத்திற்காக நியமிக்கப்படும் முதலாவது தமிழ் ஆளுநர் லோகேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆளுநராக கடமையாற்றினார். மேலும் வடக்கு மாகாண ஆளுநர்களாக பதவி வகித்த எஸ்.பலிஹக்கார, ஏ.சந்திரசிறி, டிக்சன் சரத்சந்திர தேல, விக்டர் பெரேரா, மற்றும் மொஹான் விஜேவிக்ரம ஆகியோர் அரசியல் சம்பந்தமில்ல அரச மற்றும் படை அதிகாரிகளாவர்.