Canada

வட அமெரிக்காவின் மிக பழமை வாய்ந்த மனித காலடிச்சுவடு!

கனடாவின் மேற்கு கரையோர தீவொன்றில் மனித காலடி சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 13,000-ஆண்டுகளிற்கு முந்தியவை என்றும் வட அமெரிக்காவின் மிக பழமை வாய்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலடிகள் இரண்டு வயதானவர்கள் மற்றும் ஒரு பிள்ளை வெறுங்காலுடன் களிமண்ணில்-இன்று கல்வெட் தீவு பீச் என அழைக்கப்படும் பகுதியில்-நடந்து சென்றதை குறிக்கின்றன.

இப்பகுதி வன்கூவர் ஐலன்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பசுபிக் கரையோர பகுதியில் மனிதர்கள் 13,000-வருடங்களிற்கு முன்னர் வாழந்ததை இவை குறிக்கின்றன.

அக்கால கட்டத்தில் இப்பகுதி ஐஸ் இன்றி இருந்ததாகவும் 117,000-ஆண்டுகளிற்கு முன்னர் வட அமெரிக்க கண்டத்தின் கடைசி ஐஸ் காலம் முடிவடைந்ததாகவும் ஆய்வு கருதுகின்றது. இக்கண்டுபிடிப்பு மேலும் உறுதிகோளை உறுதிப்படுத்துகின்றது.

அற்ற கடற்கரை ஓர தாழ்வாரத்தினூடாக இன்று பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடைந்தனர் என்ற உறுதிகோளை இக்கண்டுபிடிப்பு மேலும் உறுதிப்படுத்துகின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top