விமானத்தை தென் பகுதியில் இறக்கச் சொன்னதாகவும், ஆனால் தவறாக வடக்கு பகுதியில் இறங்கிவிட்டதாக காத்மாண்டு விமானநிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா-வங்கதேசம் இடையிலான, பிஎஸ் 211 ரக வங்கதேச தனியார் விமானம் 71 பயணிகளுடன் நேற்று பிற்பகல் காத்மாண்டு விமானநிலையத்தில் தரையிரங்கியது.
அப்போது எதிர்பாரதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று கிழே ஓர் இடத்தில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானம் உடனடியாக தீப்பிடித்தது. இதையறித்து உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 71 பேரில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விமானம் விபத்து எப்படி நடந்தது என்பதை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், விமானம் விழுந்த உடன் தீ பற்றியதே அதிகமானவர்களின் உயிரிழப்பிற்குக் காரணம் எனவும் விமானத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்பதற்கு விமானத்தை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் விமானத்தை தென் பகுதியிலே தரையிறக்கச் சொல்லி விமான ஓட்டிக்கு கட்டளையிடப்பட்டது. ஆனால் விமானம் வடக்கு பகுதியில் தரையிரக்கப்பட்டுள்ளது. ஏன் விமானம் தென் பகுதியில் இறங்காமல், வடக்கு பகுதியில் தரையிரக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். விபத்தான விமானத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 33 பேர், வங்கதேசத்தைச் சேர்ந்த 32 பேர், சீனாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த ஒருவரும் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.