News

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 13 பேர் பலி

வியாட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரில் உள்ள 20 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.

வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள 8-வது மாவட்டத்தில் 20 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் பிடித்த தீ மற்ற வீடுகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், குடியிருப்பு வாசிகள் ஜன்னல் வழியாக கயிறுகளை கட்டியபடி இறங்கினர். பலர் கீழே குதித்தனர்.

இரண்டு மணிநேரம் போராடி மீட்புக்குழுவினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top