வீதி விபத்தில் சிக்கி 17 பேர் பலி: துருக்கியில் கொடூரம் .

துருக்கியிலிருந்து சட்டவிரோதமான முறையில் துருக்கி எல்லைக்குள் நுழைந்த வாகனம் ஒன்று வீதி விபத்தில் சிக்கியுள்ளது. இதன்போது சுமார் 17 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாக இக்திர் மாகாண ஆளுநர் இன்வெர் உன்ளு என்பவர் தெரிவித்துள்ளார்.
இவ் விபத்தானது நேற்றைய தினம் துருக்கியின் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாட்டுப்பயணிகளை ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமான முறையில் துருக்கி எல்லைக்குள் நுழைந்து நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. இவ் விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.