வேகமாக தொற்றி வரும் உலகையே அழிக்க வல்ல வைரஸ் இதுவா… ? மனித குலம் மாண்டு போகும் நிலை வருமா… ?

டிசீஸ் X என்று அழைக்கப்படும் ஒருவகையான வரைஸ் ஒரு சிலருக்கு மிருகங்களில் இருந்து தொற்றி வருவதாக உலக சுகாதார மையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. குறித்த வைரஸ் இனம் காணப்படாததால் அதற்கு X என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இந்த வைரஸ் தாக்கினால், மரணம் நிச்சயம் என்றும். மனிதர் இதுவரை கண்டுபிடித்துள்ள எந்த ஒரு மருந்துக்கும் இது அடங்காது என்றும் குறிப்பிட்டுள்ளது உலக சுகாதார மையம்.
பிலிப்பைஸ் நாட்டில் 2 பேரை தாக்கி, இரண்டே நாளில் அவர்களை கொன்றுள்ளது இந்த வைரஸ். குறித்த வைரஸ் தாக்கினால் கடும் இருமல் வருவதோடு , உடனடியாக உடலில் உள்ள முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல் ஈரல் என்பன ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டு மரணம் நிகழ்கிறது.
அதாவது இந்த வைரஸ் வெளிவிடும் ஒருவகையான நச்சு பதார்த்தம் , எமது உடல் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை எமக்கு எதிராக திருப்பி விடுகிறது. அதனால் எமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் எமக்கு எதிரியாக மாறுகிறது. இப்படியான வைரஸ் ஒன்றை தாம் இதுவரை கண்டதே இல்லை என்று கூறி விஞ்ஞானிகள் மேலும் பீதியை கிளப்பி விட்டுள்ளார்கள்.