News

ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி முல்லைத்தீவில் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுப்பு .

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதியான சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை, அவரது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரும் கையெழுத்து பெறும் நடவடிக்கை பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முல்லைத்தீவிலும் இன்று கையெழுத்திப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி மாவட்டம் நோக்கி அமைதியான முறையில் வாகனப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மக்களிடம் பெறப்படும் கையெழுத்துக்களைத் திரட்டி உரிய கோரிக்கை அடங்கிய கடித்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாகவும் ஏற்பாட்டார்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top