Blue Jays’ முதல் விளையாட்டில் பலத்த பாதுகாப்பு!

இன்று ஆரம்பிக்கும் Blue Jays’ ன் முதல் விளையாட்டு காரணமாக எயர் கனடா சென்ரர் மற்றும் றொஜர்ஸ் சென்ரர் பகுதிகளை அண்மித்த குடியிருப்புக்கள் வர்த்தகங்கள் போன்றனவற்றிற்கு ”பாதுகாப்பு திட்ட தரிப்பிட அனுமதி” அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Blue Jays விளையாட்டுக்கள் மற்றும் ஏனை நிகழ்வுகள் இடம்பெற இருப்பதால் அதிகரித்த போக்குவரத்து மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக ரொறொன்ரோ பொலிசாரிடமிருந்து ஒரு புதிய தரிப்பிட அனுமதியை இவர்கள் பெற வேண்டும்.
குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் படத்துடனான அடையாள அட்டை காண்பித்து பொலிசாரிடம் தரிப்பிட அனுமதி பெற வேண்டும். Blue Jays றொஜர்ஸ் சென்ரரில் வியாழக்கிழமை தங்கள் முதல் விளையாட்டை ஆரம்பிக்கின்றனர்.
நகரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் ஏற்படுத்தபட்டுள்ளதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். தவிர குறிப்பிட்ட அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.