News

அணு ஆயுத குறைப்பு பற்றி அமெரிக்காவுடன் விவாதிக்க தயார்: வடகொரியா அறிவிப்பு

அணு ஆயுத குறைப்பு பற்றி அமெரிக்காவுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளதாக தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் ஈய்-யங் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முதன்முறையாக சந்தித்து பேசும் வரலாற்று நிகழ்வு அடுத்த மாதம் (மே) நடக்க இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க உளவு அதிகாரிகளும், வடகொரியா உளவு அதிகாரிகளும் மூன்றாவது நாடு ஒன்றில் பலமுறை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது, தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைப்பது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக வடகொரியா அமெரிக்காவிடம் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை டிரம்ப் நிர்வாகம் உறுதி செய்து உள்ளது.

முன்னதாக, வடகொரியாவில் பயணம் மேற்கொண்ட பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசிய தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் ஈய்-யங், அணு ஆயுதம் குறைப்பு குறித்து விவாதிக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஆனால், வடகொரியா தனது விருப்பத்தை அமெரிக்காவிடம் நேரடியாக தெரிவித்து இருப்பது இதுவே முதல் முறை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top