அமெரிக்காவில் 1.25 மில்லியன் டொலர் செலவில் பூனைக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெட்ஸ் பாய்ட் என்பவர் பூனை வளர்ப்பில் மிகவும் ஆர்வமாக செயற்பட்டு வருகின்றார். இதனடிப்படையில் இவர் வளர்த்து வரும் பூனை ஒன்று 17 வயது நிரம்பிய நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு நோய் வாய்ப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் பூனையின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 3 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பூனை ஒன்றை தத்தெடுத்த பெட்ஸ் பாய்ட், 1.25 மில்லியன் டொலர் செலவில், தனது பூனைக்கு தத்தெடுத்த பூனையின் சிறுநீரகத்தை வைத்து சத்திர சிகிச்சை செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இரு பூனைகளும் நலமாக உள்ளதாகவும், அதிக வயதில் பூனைக்கு இவ்வாறு சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.