News

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவியும், ஜார்ஜ் டபுல்யூ. புஷ்சின் தாயாருமான பார்பரா புஷ் தனது 92வது வயதில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.

பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பார்பரா புஷ் தனது 92வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top