News

அமைச்சர்களின் மோசடி குறித்து விசாரணை நடத்துமாறு விக்னேஸ்வரனுக்கு ஆளுநர் கடிதம்!

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, பிரதம செயலாளர் ஊடாக விசாரணைகளை நடத்துமாறு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஆளுநர், நேற்று முதலமைச்சருக்குகடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக, வடமாகாண அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றதுடன்,, மோசடிக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவியிலிருந்து விலகியிருந்தனர். இந்நிலையில், தற்போதுள்ள அமைச்சர்கள் மோசடியில் ஈடுபடுவதாக உள்ளுர் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top