News

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானின் மேற்கு கோர் மாகாணத்தில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 6 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு கோர் மாகாணத்தில் நேற்று துப்பாக்கியுடன் வந்த பயங்கரவாதி அங்கிருந்த கார் ஒன்றை சுட்டுத்தள்ளியுள்ளார். இதில், 6 பேர் பலியானதாகவும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்மாகாணத்தில் சிறுபாண்மையினராக உள்ள ஷியா பிரிவினரை குறிவைத்து தாலிபான் உள்ளிட்ட சில பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top