News

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரண்மனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இளவரசர் பிலிப்புக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top