News

இன்னல்களை எதிர் நோக்கும் முன்னாள் போராளிகள்: உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை

எந்தவிதமான வாழ்வாதாரமும் இன்றி இன்னல்களை எதிர்நோக்கி வரும் பொத்துவில் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிக்கரங்களை நீட்ட வேண்டும் என நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் த. கலையரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசசபைக்குட்பட்ட கோமாரி கிராமத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கண்காணிப்பும் கலந்தாய்வும் நேற்று நடைபெற்றது.

கட்சியின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எவை என ஆராயப்பட்டு மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பபட்டது. அப்போது மக்கள் கட்சி தொடர்பான பல கருத்துக்களை முன்வைத்தனர். அதனடிப்படையில் தமிழர் பிரதேசங்களை பொறுத்தவரையில் அபிவிருத்தி சார்ந்த விடயங்ககளில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுகிறது.

ஒருசில அபிவிருத்திகள்கூட மந்த கதியில் நடைபெறுவதாகவும் அதனை கட்சியின் தலைமைகள் கருத்தில் கொள்வதில்லை எனவும் கட்சியின் தலைமைகள் எமது பிரதேசத்தில் அடிக்கடி வருகை தந்து மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் கருத்துரைத்த தமிழரசுக் கட்சியின் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் த. கலையரசன், யுத்த காலங்களில் தங்களது காணிகளை வனவிலங்கு இலாகா தன்வசப்படுத்தியதால் இக்கிராம மக்கள் வாழ்வாதாரத்திற்கான விவசாயத்தினை மேற்கொள்வதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அப்போது அந்த காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டது.

காணி விடுவிப்பு சம்பந்தமாக அபிவிருத்தி குழு கூட்டங்களில் சுட்டிகாட்டப்பட்டது. அதற்கு அதிகாரிகள் தடையாக இருக்கின்றார்கள். பொத்துவில் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் பலர் எந்தவிதமான வாழ்வாதாரமும் இன்றி இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிக்கரங்களை நீட்டி உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

பொத்துவில் பகுதி இளைஞர்களின் நலன் கருதி தொழிவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க தொழிற்பேட்டைகளை அமைக்கவும் புலம்பெயர் அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை, பொத்துவில் பிரதேசசபை வரலாற்றில் தமிழர் ஒருவர் உப தவிசாளர் வந்திருப்பதை வரவேற்பதாகவும் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இக் கலந்தாய்வு கூட்டத்தில் இலங்கை தமிழ். அரசுக் கட்சியின் நிருவாக செயலாளர் குலநாயகம் ,பொருளாளர் கனகசபை, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய நாவிதன்வெளி பிரதேச்சபையின் த. கலையரசன், யாழ் காங்கேசன்துறை பிரதேச சபை உறுப்பினர் அமுதன் சேனாதிராஜா, பொத்துவில் உப தவிசாளர் பார்த்தீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top