News

ஈழப் பிரிவினைவாதிகளுடன் பேசமாட்டேன்! – ஜனாதிபதி திட்டவட்டம்

தனி ஈழம் கோரும் பிரிவினைவாதிகளுடன் எந்தவொரு பேச்சுக்களை நடத்துவதற்கும் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “ லண்டனில் எனக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்களின் கடைசிக் கோரிக்கை தனித் தமிழ் ஈழம். அது ஒருகாலமும் நிறைவேறப் போகும் விடயமே கிடையாது.

நாட்டைத் துண்டாட ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். ஈழப்பிரிவினை கோரும் எந்தவொரு தரப்புடனும் எதுவித பேச்சுக்களை மேற்கொள்ளவும் நான் தயாரில்லை. இலங்கையில் அரசியல் கைதிகள் என்றொரு தரப்பினர் கிடையாது. அதே ​போன்று இரகசிய தடுப்பு முகாம்களும் கிடையாது. எனது அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு நபரையும் சட்டவிரோதமாகவோ, ரகசியமாகவோ தடுத்து வைத்திருக்கவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top