News

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தன் விலகுவது நல்லது! – மனோ கணேசன்

புதிய அரசமைப்புத் தொடர்பான பணிகளை ஆரம்பிக்க முடியாவிடின், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகுவதே நல்லது என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில், சிங்களத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி, வெளியிட்ட டுவீட்களிலேயே, இக்கருத்தை அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள், தமிழ் மக்களின் பிரச்சினை அன்று. தமிழ் மக்களின் முன்னுரிமைப் பட்டியலில், இனப்பிரச்சினையே முதலிடம் வகிக்கிறது. புதிய அரசமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லையென்றால், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி, வெறுமனே ஒரு பக்க வாத்தியம் தான். புதிய அரசமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, சம்பந்தன் இராஜினாமா செய்தல் நலம். அதன் பிறகும் தொடர்ந்தால், அது பக்கவாத்திய ஊதல் தான். ஈழக் கோரிக்கையை, இரா. சம்பந்தன் கைவிட்டமையை, இலங்கையின் தெற்குப் பகுதி புரிந்து கொள்ளவில்லை என்பதோடு, அதை மதிக்கவுமில்லை எனத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top