ஒன்ராறியோவில் “சம வேலைக்கு சம ஊதியம்” ஆரம்பம்!

ஒன்ராறியோவின் புதிய “சமவேலைக்கு சம ஊதியம்” அமுலிற்கு வந்துள்ளது. இதன் பிரகாரம் பகுதி-நேரம், தற்செயல் மற்றும் பருவகால ஊழியர்கள் முழு நேர ஊழியர்களாக பணியாற்றும் தங்கள் சகாக்கள் பெறும் அதே ஊழியத்தை பெற வேண்டும் என புதிய சட்டம் தெரிவிக்கின்றது.
ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வந்துள்ள இந்த சட்டத்தை ஜனவரி1-ல் குறைந்த பட்ச மணித்தியால ஊதியத்தை டொலர்கள் 14ஆக அதிகரித்த அதே சட்டம் ஏற்படுத்தியுள்ளது. Fair Workplaces, Better Jobs Act-எனப்படும் மாகாணத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகின்றது.
அமுலிற்கு வந்துள்ள இப் பகுதி நேர ஊழியர்களிற்கும் சம ஊதியத்தை ஏற்பாடு செய்துள்ள வட அமெரிக்காவின் முதல் அதிகார வரம்பு ஒன்ராறியோ மாகாணமாகும். பணி மூப்பு தகுதி அல்லது உற்பத்தியின் அளவு அல்லது தரம் குறித்து வருமானம் அளவிடப்படும் பட்சத்தை அடிப்படையாக கொண்டு சட்டம் விதிவிலக்கு அளிக்கின்றது.
தற்காலிக ஊழியரகளின் பாதுகாப்பு கருதியே ஒன்ராறியோ அரசாங்கம் புதிய சட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. சம ஊதியம் கிடைக்காவிடில் புதிய சட்டத்தின் கீழ் அனைத்து ஊழியர்களும் மதிப்பாய்வு கோரவும் உரிமை உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.