கணிசமான அளவு உறைபனி மழை சாத்தியம்!

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளில் உறைபனி மழை பெய்யலாம் என கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது. கலிடோன், யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசம் மற்றும் பார்ரி பகுதிகளில் வார இறுதியில் உறைபனி மழை பெரும்பாலும் ஏறடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் தென்பகுதி, ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பகுதிகளில் லேக் ஒன்ராறியோ அருகில் மழை எதிர்பார்க்கப்படுகின்றது. சில சுற்று மழையுடன் ரொறொன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளில் சாத்தியமான உறைபனி மழை ஏற்படலாம் என அச்சுறுத்தப்பட்டுள்ளதாக கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது.
இந்த அமைப்பு வார இறுதியில் பாரிய பனிப்புயலை கொண்டு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. காற்று மணித்தியாலத்திற்கு 60-கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஞாயிற்றுகிழமை அதிக வெப்பநிலை ஏற்படலாம்.