கனடாவில் இலங்கையர்கள் கொடூரமாக கொலை: குற்றம் சுமத்தப்பட்டவர் மீண்டும் நீதிமன்றில் .

இலங்கையர்கள் இருவர் உள்ளிட்ட எட்டு பேரை கொடூரமான முறையில் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கனடா நாட்டவபுரூஸ் மெக் ஆத்தர் ரான என்பவர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதன்படி அடுத்த மாதம் 23ம் திகதி காணொளி ஊடாக நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கனடாவுக்கு அகதியாக சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் கனகரத்தினம் மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா நவரட்ணம் ஆகியோரை கொலை செய்ததாக புரூஸ் மெக் ஆத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அவர் மீண்டும் விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.