கனடியர்களின் கைப்பேசிகளில் அவசர எச்சரிக்கை!

அவசர எச்சரிக்கைகளை பெறுவதற்கு இன்று முதல் கனடியர்கள் தொலைக்காட்சி அல்லது வானொலிகளிற்கு அருகில் அமர தேவையில்லை. உயிர்-ஆபத்தான அவசர நிலை எச்சரிக்கைகள் இணக்க மொபைல் பேசிகளில் ஒலிபரப்பபடும். தேசிய பொது எச்சரிக்கை அமைப்பு-எச்சரிக்கை தயார் என அழைக்கப்படும்- வயர்லஸ் நெட்வேர்க் இணைப்பில் உள்ளடக்கப்படும்.
இன்று முதல் பாரம்பரிய ஒலிபரப்பு ஒலிஅலைவரிசைக்கு மேலதிகமாக இம்முறை நடை முறைக்கு வருகின்றது. இந்த எச்சரிக்கை இரு மொழி உரை எச்சரிக்கையாக கைப்பேசிகளில் தோன்றும். காட்டு தீ, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது காணாமல் போன குழந்தை குறித்த அம்பர் எச்சரிக்கை போன்ற நிலைமைகள் எச்சரிக்கைக்குள் அடங்கும்.
கனடா ஒலிபரப்பு ஒழுங்கு முறைCRTC-கனடிய வானொலி தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு கமிசன் மார்ச் 6-ல் இந்த அமைப்பு குறித்த பரீட்சார்த்த திட்டமொன்றை வயர்லஸ் கெரியர்கள் நடத்தும் என தெரிவித்துள்ளது.