News

கர்ப்பிணி தாயை சுட்ட 3 வயது மகள் .

இன்டியானா மாகாணத்தில் 3 வயது சிறுமி தவறுதலாக கர்ப்பமாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

Shanique Thomas என்பவர் 7 வாரம் கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் தனது கணவர் மற்றும் 3 வயது மகள், 1 வயது மகனுடன் ஆடை
வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

கடைக்கு சென்றவுடன், சற்று சோர்வாக இருந்ததால், காருக்குள் குழந்தைகளோடு அமர்ந்து கொண்டார். இவர் முன்சீட்டில்
அர்ந்திருந்தார். குழந்தைகள் இருவரும் பின் சீட்டில் அமர்ந்திருந்துள்ளனர்.

தந்தை கடைக்குள் செல்வதற்கு முன்னர், தனது ஆட்டோமேட்டிக் துப்பாக்கியை லோட் செய்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கியை எடுத்து மகள் விளையாடியபோது, குண்டானது தாயின் தோள்பட்டையில் பாய்ந்து ரத்தம் பீறிட்டுள்ளது.
மயங்கி விழுந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தந்தையின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்துள்ளது என பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top