News

கல்லூரி மாணவர்கள் மூவர் அசிட்டில் முக்கி படுகொலை!!!

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று 3 மாணவர்களை கடத்தி அவர்களை அசிட்டில் முக்கி படுகொலை செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் மெக்சிகோவில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடத்தப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், அவர்களது உடல்கள் டெனாலா நகரில் உள்ள ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடத்திச் சென்றவர்கள் அவர்களை கொலை செய்து, உடல்களை அங்குள்ள அமிலத் தொட்டியில் மூழ்கடித்துள்ளனர். உடல்களை அடையாளம் காண முடியாததால் உடல் கூற்றுப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இக் கொடூர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top