காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை .

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் விபரங்கள், அவர்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கும் விடயங்கள் குறித்து உறவினர்களிடம் கலந்துரையாட எண்ணியுள்ளதாக செயலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்தின் பணிகளை ஆரம்பிக்க தேவையான நிர்வாக அதிகாரிகளை இணைத்துக்கொள்வற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் பணிகள் நேற்றுடன் முடிவடைந்தன. செயலகத்திற்கான அதிகாரிகள் அடுத்த மாத இறுதிக்குள் பணியில் இணைந்துக்கொள்ளப்பட உள்ளனர்.
இதனையடுத்து செயலகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
இவர்களை தவிர தேவையான விசாரணைகளை அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களும் கோரப்படவுள்ளன. காணாமல் போனவர்களின் தகவல்கள் அடங்கிய அறிக்கை ஏற்கனவே காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்திற்கு கிடைத்துள்ளதாகவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.