Canada

கியுபெக் துப்பாக்கி சூட்டில் செயலிழந்தவருக்கு அணுகல் வீடு!

கியுபெக்கில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் சுடப்பட்ட மனிதர் ஒருவருக்கு மார்பிற்கு கீழ் செயலிழப்பு ஏற்பட்டது.

இவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட Crowdfundingபிரச்சாரம் 40-நாடுகளில் இருந்து 4,800 மக்களை கவர்ந்தது. இதன் மூலம் சேர்ந்த 400,000-டொலர்களிற்கும் மேலான தொகை இவர் தனக்கு அணுககூடிய புதிய வீடொன்றை வாங்க உபயோகிக்க உள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் ஜனவரி 2017-ல் கியுபெக் நகர பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சுடப்பட்டவர். ஏழுதரம் சுடப்பட்டுள்ளார்.

ரொறொன்ரோவை சேர்ந்த இலாப நோக்கற்ற குழுவான DawaNet-ஆரம்பிக்கப்பட்ட crowdfunding-பிரச்சாரம் மூலம் 416,375 டொலர்கள் கிடைக்கப்பெற்றது.

இந்த நிதி இவரின் இயலாமைக்கேற்ற வீடொன்றை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவரது கதை உலகம் பூராகவும் அனைத்து மக்களது கவனத்தையும் ஈர்த்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top