News

கொழும்பு அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கருத்து கணிப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பேஸ்புக் மூலம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலேயே கோத்தபாய இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்ற பேஸ்புக் பக்கம் ஒன்றினால் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எட்டாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் கோத்தாபயவுக்கு ஆதரவாக 55 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது.

இரண்டாவது இடத்தை தற்போதைய அமைச்சர் சஜித் பிரேமதாஸ பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் ஆறாயிரத்திற்கும் அதிகமாகும்.

எனினும் சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அவர் 500 இற்கும் சற்று அதிகமான வாக்குகளையே பெற்றள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பட்டியலில் நூற்றுக்கும் சற்று அதிகமான வாக்குகளை பெற்று 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்துக் கணிப்பின் மூலம் சமகால அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நீடிக்குமாயின் 2020ம் ஆண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top