News

சம்பந்தன் – விக்கி இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் வடமாகாண முதலமைச்சரும் மனம் விட்டுப் பேசவேண்டும். என கூறியிருக்கும் அமைச்சர் மனோ கணேசன் தமிழ் மக்களின் எதிர்காலநலன்களுக்காக இரு தலைவர்களும் இதனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இ ன்று காலை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர்மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன் போது மேலும் அவர் கூறுகையில்,யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரத்தை முன்னர் தபால் கட்டளை பொருளாதாரம் எனக் கூறுவார்கள். ஆனால் இது இன்று உண்டியல் பொருளாதாரமாக மாறியுள்ளது. அதற்காக இளைஞர்கள் மத்தியில் மனமாற்றம் உண்டாக வேண்டும்.இங்குள்ள இளைஞர்களுடன் பேசிய போது அவர்களிடத்தில் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகின்றது. இந்த நிலையும் ஆபத்தான ஒன்றாகவே உள்ளது.

யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரம் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. ஆனால் அந்த துறைகள் இந்த மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக சரியாகபயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இந்த மாவட்டத்தில்சொல்லிக் கொள்ளும் அளவில் அபிவிருத்தி பணிகள் இடம்பெறவில்லை. அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட் டுக் கொடுக்கவியலாது.

தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையை யும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள்.ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இரா.சம்பந்தனும், சீ.வி.விக்னேஸ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட் டுப் பேச வேண்டும்.

இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான்கூற வரவில்லை.இருவருமே மனம் விட்டுப் பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்பட வேண்டும். மேலும் தந்தை செல்வா போன்றவர்கள் அகிம்ஷை வழியில் போராடினார்கள். பின்னர்புலிகள் ஆயுத வழியில் போராடினார்கள்.

இப்போது சம்பந்தன் சர்வதேச ஆதரவுடன் போராடிவருகிறார். அதேசமயம் நான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிங்கள மக்களிடம் கொண்டுசெல்கிறேன். இந்த அரசாங்கம் புலிகள் இருந்த காலத்தில் ஈழம் தவிர எல்லாம் தருகிறோம் என்றார்கள். இன்று எதுவும் தர மாட்டோம் என்கிறார்கள். ஆகவே தான் நண்பன்ரவிராஜ் வழியில் இதனை நான் செய்கிறேன் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top