Canada

சுட்டுக் கொல்லப்பட்ட கனடா சிறுவன்: பொலிசார் அறிக்கை தாக்கல் .

கனடாவில் மூன்று உறவினர்களை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞன் குறித்து பொலிஸ் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள கிராமம் Akulivik, இப்பகுதியில் வசிக்கும் Illutak Anautak என்ற 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடிபோதையில் தன் உறவினர்கள் மீது கத்தித் தாக்குதல் நடத்தியதில் மூவர் இறந்துவிடவே, பொலிசாரின் துரித நடவடிக்கையால் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நான்கு தனித்தனி அறிக்கைகள் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ளது. அத்தகவல்கள் பின்வருமாறு, சம்பவம் நடந்த தினத்தன்று, Illutak Anautak-க்கிடம் உறவினர் ஒருவர், நீ தாய் தந்தை அற்றவன், உன்னை தட்டிக் கேட்க யாருமில்லை, உன்னால் இந்த கிராமத்திற்கு ஒரு நல்லதும் செய்ய முடியவில்லை எனக் கூறியிருக்கிறார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த Illutak Anautak- ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த நிலையில் உறவினர்களை கத்தியால் குத்தியுள்ளான். எட்டு பேர் மீது தாக்குதல் நடந்த நிலையில் மூன்று பேர் இறந்துவிட்டனர்.

இதனையடுத்து பொலிசுக்கு தகவல் கிடைக்கப்பெற விரைந்து வந்த அதிகாரிகள், குற்றவாளியை பிடிக்க முயன்ற போது, கத்தியை காட்டி மிரட்டியுள்ளான். தொடர்ந்து அவனது பாட்டி வீட்டுக்குள் செல்ல முற்பட்ட போது, பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதில் அவனது வயிற்றில் இரண்டு குண்டுகளும், முதுகில் மூன்று குண்டுகளும் மற்றும் தோள்பட்டையில் ஒரு குண்டும் பாய்ந்த நிலையில் இறந்திருக்கிறான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாய் மற்றும் சகோதரர் இறந்த நிலையில் மன அழுத்தத்தில் Illutak Anautak இருந்ததாகவும், சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு பேஸ்புக்கில் உறவினர்களை கொன்றுவிட்டதாக பதிவிட்டதாகவும் அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவனது மன அழுத்ததே இதற்கு காரணம் என பொலிசார் விசாரணை அறிக்கையை முடித்து வைத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top