ஜனாதிபதியின் மௌனத்தால் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஏமாற்றம்!

தமிழ் சிங்கள சித்திரைப் புதுவருடத்திலாவது தந்தை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புதுவருடத்துக்கு முன்னர் தந்தையை ஜனாதிபதி விடுவித்து, அப்பா தம்முடன் இணைவார் என்றுஆனந்த சுதாகரின் பிள்ளைகள் நம்பிக்கையில் இருந்தனர்.
தந்தையை விடுவிக்கக் கோரி அவர்கள் மனு ஒன்றையும் ஜனாதிபதியிடம் நேரில் கையளித்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய புதுவருடத்தில் தாயும் இல்லாது தந்தையும் இல்லாது புதுவருடத்தைக் கொண்டாட முடியாதவர்களாக ஏமாற்றமடைந்த நிலையில் அந்தப் பிஞ்சுகள் இருவரும் அநாதரவான நிலையில் இருக்கின்றனர்.