News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சவால் விடுத்த மகிந்த ராஜபக்ச.

நம்பிக்கை இருந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சவால் விடுத்துள்ளார். தங்காலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா கொண்டாட்டங்களின் போது உரையாற்றிய அவர், “கூட்டு எதிரணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகளை தற்போதைய அரசாங்கம் நிறுத்தி விட்டது. நாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத்துக்கு உடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஐதேகவுக்குள் ஆழமான பிளவுகள் தோன்றியுள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் தேர்தல்களைப் பிற்போடத் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை எந்த தேர்தல் முறையின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்கு முகம் கொடுக்க தயாராக இருக்கிறோம். அரசாங்கம் தாமரை மொட்டை ஒழிக்க எத்தகைய முயற்சிகள் செய்தாலும் மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிப்பார்கள் என்பது கடந்த தேர்தலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் கடந்தும் பழிவாங்கும் எண்ணங்கள் கைவிடப்படவில்லை. முடிந்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுக் காட்டட்டும் என்றும் அவர் ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top