News

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பேர் பலி , 30 பேர் படுகாயம், 8 பேர் கவலைக்கிடம்.

ஜேர்மனியில் திறந்த வெளியில் இருக்கும் உணவகத்தில் அதிவேகமாக வந்த வேன் ஒன்று அங்கிருந்த பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியதால் 4 பேர் பலியாகியுள்ளனர். ஜேர்மனியின் Berlin பகுதியிலிருந்து சுமார் 300 மைல் தொலைவில் உள்ள Munster-ல் திறந்த வெளியில் இருக்கும் உணவகத்தில் பொதுமக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அதிகவேகமாக வந்த வேன் ஒன்று அங்கு இருக்கையில் உட்கார்ந்திருந்த பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியதால், 4 பேர் பலியாகியுள்ளதுடன், 30-க்கும் மேற்பட்டோர் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 30 பேரில் 8 பேர் உயிருக்கு போராடி வருவதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் சம்பவத்தை அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தீவிரவாத தாக்குதலா இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு இதே திகதியில் Stockholm பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 5 பேர் பலியாகியதுடன் 14 பேர் காயமடைந்திருந்தனர். ஆனால் பொலிசார் இது குறித்து இன்னும் உறுதியான தகவல் தெரியவில் எனவும், விபத்தை ஏற்படுத்திய டிரைவர் விபத்திற்கு பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டதால், இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top