News

தத்துக் குழந்தைகளை சித்ரவதை செய்த பெற்றோர் :காரில் குழந்தைகளோடு மலையிலிருந்து விழுந்து சாவு .

கடந்த மாத இறுதியில் நடந்த SUV கார் விபத்தில் குழந்தைகளோடு இறந்த பெற்றோர் தங்கள் தத்து குழந்தைகளை சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் ஜெனீபர் ஹார்ட் எனும் பெண் குடித்து விட்டு வண்டி ஓட்டிய விபத்தில் அவரும் அவரது மனைவியும் மற்றும் 6 குழந்தைகளும் இறந்து போன பின் இரண்டு தேடல்கள் இதன் மூலம் ஏற்பட்டன.

ஒன்று : இறந்தவர்களின் உடலை தேடுவது இரண்டாவது. புகைப்படங்களில் இத்தனை சந்தோஷமாக இருக்கும் இந்தக் குடும்பம் எப்படி தனது இருண்ட பக்கத்தை உலகிலிருந்து மறைத்திருக்கிறது என்கிற உண்மைக்கான தேடல். பல டஜன் பக்கங்கள் கொண்ட விளக்கங்கள் மூலம் குழந்தைகள் நல அதிகாரிகள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதற்கான துப்புக்கள் கிடைத்துள்ளன.

அந்தப் புகைப்படத்தில் காணப்படும் இரு பெண்கள் தான் இந்த ஆறு குழந்தைகளின் பெற்றோர். ஒரே பாலினத் திருமணத்திற்கு பின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தான் இந்த ஆறு பேர். கடந்த மாதத்தின் கடைசியில் ஏற்பட்ட விபத்தொன்றில் இந்த ஒரே பாலின ஜோடியும் அவர்களது தத்துக் குழந்தைகளும் இருந்திருக்கின்றனர். 100அடி உயர மலையுச்சி ஒன்றில் குடித்து விட்டு வண்டி ஓட்டிய விபத்தில் ஜெனிபர் ஹார்ட் மற்றும் அவரது மனைவி சாரா ஹார்ட் மற்றும் குழந்தைகள் பற்றிய ஒரு மர்மமான உண்மை தற்போது வெளிவந்திருக்கிறது

அந்த விபத்திற்கு பின் பசிபிக் கடலோர பகுதிகளில் உடல்கள் தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.அதில் பெற்றோர் ஜெனிபர் மற்றும் சாரா ஹார்ட் ஆகிய இருவரும் மற்றும் அவர்களது ஆறு குழந்தைகளில் நான்கு குழந்தைகளான , மார்க்கிஸ், 19; எரேமியா, 14 , அபிகாயில், 14 மற்றும் சியரா, 12 ஆகியோரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் டெவொன்டே ஹார்ட் 15, மற்றும் ஹன்னா ஹார்ட் 16 ஆகியோரின் உடல்கள் இன்னும் கிடைக்காத நிலையில் குழந்தைகள் இறந்ததாக அஞ்சப்படுகிறது.

இவர்கள் பற்றி வெளியிடப்பட்ட தகவல் அறிக்கையில் இந்த ஒரே பாலின தம்பதியினர் அவர்களது தத்துக் குழந்தைகளை பல்வேறு விதங்களில் துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. ஹார்ட் குடும்பத்தை பொறுத்தவரையில் கீழ்ப்படியாமை என்கிற விஷயமே அங்கு நடக்காது ஏன் எனில் எல்லாவற்றுக்கும் தண்டனை உண்டு என்பது குழந்தைகளுக்கும் நன்கு தெரிந்திருந்தது என்கிறார் புதிதாக உருவான ஆவணங்களின்படி இந்தக் குடும்பத்தின் இயக்கமுறை அறிந்த ஒருவர். அந்த ஆறு குழந்தைகளும் அந்த வீட்டில் ஒரு பயிற்றுவிக்கப்பட்ட ரோபோக்கள் போலவே வாழ்ந்தனர் என்று கவலையுடன் குறிப்பிடுகிறார் ஹார்ட் குடும்பத்தின் அண்டை வீட்டாரில் ஒருவர். நாங்கள் அவர்களை சின்ன ராணுவ வீரர்கள் என்றுதான் அழைப்போம் என்கின்றனர்.

இதன் படி இந்த ஓரே பாலின பெற்றோர் , முதலில் மினசோட்டாவில் வாழ்ந்த போது குழந்தைகளுக்கான ஊட்ட சத்து கூட ஒழுங்காக வழங்கப்படவில்லை என்கிற புகாரின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டனர். இதன்மூலம் குழந்தை நல அதிகாரிகள் இந்தக் குடும்பத்தை தொடர்பு கொண்டனர். 2010ல் இவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில் 6 குழந்தைகளில் ஒன்றான அபிகெயில் உடல் முழுதும் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு ரூபாயை தன் உடையில் வைத்திருக்கிறாள் அபிகெயில் அது எப்படி வந்தது எனக் கேட்டு “கட்டுப்பாட்டை” மீறியதற்காக அடித்த அடியில் உடலெங்கும் விளார் விளாராக காயம் ஏற்பட்டுள்ளது என்று ஆவணம் தெரிவிக்கின்றது.

இதன் பின் இந்தப் பெற்றோர் கோர்ட் உத்தரவு படி ஹோம் தெரபி, ஆலோசனை மற்றும் எண்ணக் கட்டமைப்பு பற்றிய பயிற்சி எடுக்க சம்மதித்துள்ளனர். 2011ஆம் ஆண்டு ஹன்னா சாப்பிடவில்லை என்று பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியுள்ள நிலையில் முழு வாழைப்பழத்தையும் முரட்டுத்தனமாக குழந்தையின் வாயில் திணித்ததை அந்த நிர்வாகி நேரில் கண்டிருக்கிறார் அதன்பின் குழந்தைகள் பற்றிய விஷயங்களை இவர்கள் வீட்டில் சொல்லவே பயந்திருக்கிறது பள்ளி நிர்வாகம்.ஏனெனில் அதன் மூலம் குழந்தைகள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த படுவார்கள் என்பதால்.

ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு பின் தன் குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தபடியே ஹோம் ஸ்கூல் முறையில் கல்வி கற்பிக்கப் போவதாக கூறி பள்ளியிலிருந்து குழந்தைகளை வெளியேற்றி வீட்டில் வைத்தனர் அந்தப் பெற்றோர் பிஸ்ஸா ஒன்றை ஆர்டர் செய்த பெற்றோர்களில் ஒருவர் குழந்தைகளுக்கு சிறிய துண்டு மட்டுமே தந்திருக்கிறார். இருப்பினும் முதல் நாள் பிஸ்ஸா உண்டதால் அடுத்த நாள் காலை உணவை நிறுத்தியதுடன் 5 மணிநேரம் படுத்தபடியே இருக்கும் தண்டனையும் கொடுத்துள்ளார்.

அந்தப் பெற்றோர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நண்பர்கள் போல பழகுவார்கள் என்று கூறும் எதிர் தெரு பெண்மணி அவர்களின் குழந்தைகளின் நடவடிக்கை தன்னை தொந்தரவு செய்ததாக கூறுகிறார் ஏனெனில் அது சாதாரணக் குழந்தைகளின் நடத்தை போல இல்லை என்று தெரிவிக்கிறார், சில நேரங்களில் அந்த ஆறு குழந்தைகளில் யாராவது ஒருவர் வந்து எதிர் வீட்டுக்காரர்களிடம் உணவு கேட்டு வாங்கி சாப்பிடுவதும் அது பற்றி தங்கள் பெற்றோரிடம் கூற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாக அண்டை வீட்டார் கூறியுள்ளனர்.

ஒருமுறை அவர்களது மூத்த மகள் அதிகாலை 1.30 மணியளவில் இரண்டாவது மாடியில் உள்ள குடும்பத்திடம் தஞ்சம் அடைந்து தன்னைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டாம் என்றும் அவரது பெற்றோர் இனப்பாகுபாடு காட்டிக் கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இவை அத்தனையையும் சாதாரண நிகழ்வு என்கிற கண்ணோட்டத்தில் பெற்றோர் குழந்தைகளிடம் கண்டிப்பாக இருப்பது அவசியம் என்கிற ரீதியிலேயே இந்த புகார்கள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன இருப்பினும் இந்த ஆண்டு வாஷிங்டனுக்கு மாற்றப்பட்ட இந்த புகார்கள் மார்ச் 23 அன்று பதிவு செய்யப்பட்டது.

அன்றைக்கே நேருக்கு நேர் விசாரிக்க சென்ற அதிகாரி ஒருவர் இந்த பழுப்பு நிற SUV காரை பார்த்திருக்கிறார் என தெரிய வருகிறது. தன்னை கடந்து சென்ற காரை விட்டுவிட்டு ஹார்ட்ஸ் தம்பதியினர் இருந்த முகவரியின் வீட்டுக் கதவை தட்டியிருக்கிறார் அதிகாரி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மீண்டும் மார்ச் 26ம் தேதி இவர்கள் வீட்டிற்கு வந்து பாத்திருக்கிறார். அப்போதும் ஆளில்லாத நிலையில் அடுத்த நாள் காலை இந்த விபத்து நடந்து இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் இறந்திருக்கின்றனர். நடந்த விபத்தில் எட்டு குடும்ப உறுப்பினர்களும் இறந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆவணங்களின் படி , மினசோட்டா, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில் உள்ள குழந்தை நலத்துறை அதிகாரிகள் – கடந்த ஏழு ஆண்டுகளில் ஹார்ட்ஸ் வாழ்ந்த மூன்று மாநிலங்களில் – அவர்களை பற்றிய முறைகேடான புகார்கள் எழுந்திருந்தாலும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அதனை அலட்சியப்படுத்தி விட்டதையும் மூன்றாவதாக இந்த வழக்கு மிக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட காரணத்தையும் குறிப்பிட்டுள்ளன.

இநிலையில் இந்த ஆவணம் பற்றி குறிப்பிடுகையில் “இந்த பதிவுகளின் வெளியீடு எதிர்கால சோகங்களைத் தவிர்க்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ஓரிகான் மனிதவளத் திணைக்களத்தின் கரோலின் பர்ன்ல் ஆவணங்களுடன் இணைந்த ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இந்தப் புகைப்படத்தில் உறைந்திருக்கும் இந்தப் புன்னகைகள் பின்னான மர்மங்கள் இவர்களின் இறப்புக்குப் பின்தான் தெரிய வந்துள்ளன என்பதுதான் நம் நெஞ்சை அறுக்கும் சோகமாக இருக்கிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top