Canada

தீவிரவாதிகள் ரசாயனத் தாக்குதல் நிகழ்த்தலாம்: அச்சத்தில் கனடா .

சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து திரும்பும் ஐஎஸ்ஸின் உறுப்பினர்கள் கனடாவில் ரசாயனத் தாக்குதல் நிகழ்த்தலாம் என்னும் அச்சம் எழுந்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கிலிருந்த தீவிரவாதிகளுக்கு ரசாயன ஆயுதங்களின் பயன்பாடு தெரியும் என்பதால் அதையே அவர்கள் கனடாவில் பயன்படுத்தலாம் என கனடா அரசின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் நிகழ்த்தப்பட்டது போல் தாக்குதல் நடத்துவது கனடாவில் சாத்தியமில்லை என்றாலும் சிரியா மற்றும் ஈராக்கில் இருக்கும்போது ரசாயனத் தாக்குதல்களைக் கற்றுக்கொண்டவர்கள் கனடாவிற்கு வந்து அங்கு தீவிரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த முடியும் என அஞ்சப்படுகிறது. இப்போது கனடா பொலிஸ் மற்றும் பதுகாப்புப்படையினரின் பிரச்சினை சிரியா மற்றும் ஈராக்குக்கு தீவிரவாதக் குழுக்களில் சேர்வதற்காக சென்றவர்கள் கனடா திரும்பும்போது அவர்களை எதிர்கொள்ளுவதுதான்.

இதுவரை 100 பேர் கனடாவிலிருந்து தீவிரவாதக் குழுக்களில் சேர்வதற்காக சென்றதாகவும், 60 பேர் தீவிரவாதக் குழுக்களில் இருந்துவிட்டு திரும்பி வந்திருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது. அடுத்த சில மாதங்களில் பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் வர இருப்பதாக எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலிருந்து இத்தகைய தீவிரவாதிகள் சந்தையில் கிடைக்கும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினார்கள் என்பது தெரிய வந்திருப்பதால் கிடைக்கும் எதையும் கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடியவர்கள் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இதனாலேயே அதைக்குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top