தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா:

கியூபாவின் தலைநகரான ஹாவானாவில் பரவும் விநோத நோயால் அங்கு உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை கனடா திரும்ப அழைத்துள்ளது. கியூபாவில் உள்ள கனடாவை சேர்ந்த 10 பேருக்கு விளக்கமுடியாத மூளை நோய்க்கான அறிகுறிகள் இருந்துள்ளது.
இந்த நோய்க்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஒரு ஆண்டாக விசாரணை நடத்தியும் அதனை சரியாக இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. முதலில் எட்டு கனடியர்களுக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் இருந்த நிலையில் அது பின்னர் பத்தாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாகவே அவர்களை கனடாவுக்கு திரும்ப அழைக்க அரசு முடிவெடுத்துள்ளது. மொத்தமாக 27 பேரிடம் நோய் அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வாரங்களில் கியூபாவில் உள்ள கனடிய தூதரக ஊழியர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.