தைவானில் மின்னணு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழப்பு

தைவானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மின்னணு தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தைவான் நாட்டின் தவோயுவான் பகுதியில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள முன்னணு தொழிற்சாலை ஒன்றில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த 8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிலர் சிக்கிக்கொண்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அதோடு ஒரு குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீவிபத்தில் ஐந்து தீயைணைப்பு வீரர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. பலியான மற்ற இரண்டு பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.