நடுவானில் பயங்கரம்: வெடித்துச் சிதறிய விமான எஞ்சின் – உயிர் பயத்தில் அலறிய பயணிகள் .

அமெரிக்காவில் டல்லாஸ் நகரம் நோக்கி புறப்பட்டு சென்ற விமானம் ஒன்றின் எஞ்சின் நடுவானில் வெடித்துச் சிதறியய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் விமானத்தில் ஜன்னல் ஒன்றின் கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் பெண் பயணி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
நியூயார்க் நகரின் LaGuardia விமான நிலையத்தில் இருந்து டல்லாஸ் நகரம் நோக்கி 143 பயணிகளுடன் Southwest Airlines விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த விமானம் 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அதன் எஞ்சின் ஒன்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் கூர்மையான ஒரு பகுதி விமானத்தின் ஜன்னல் ஒன்றில் மோதியதில் அந்த ஜன்னல் உடைந்து நொறுங்கியுள்ளது. இதில் அந்த ஜன்னல் அருகாமையில் இருந்த பெண் பயணி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். அவரது அருகாமையில் இருந்த பயணிகள், கொத்தாக அவரை பிடித்து காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவத்தை அடுத்து ஒற்றை எஞ்சினுடன் அந்த விமானத்தை விமானி பிலடெல்பியாவில் தரையிறக்கியுள்ளார். நிர்வாகிகள் காயமடைந்த பெண் பயணி தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்களை வெளியிடவில்லை. விபத்துக்கு பின்னரும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. மேலும் பயணிகள் அனைவரையும் மீட்டு பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். 143 பயணிகளையும் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்த விமானியை பாராட்டியுள்ளனர்.