India

நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநரை போட்டுக்கொடுத்த உளவுத்துறை! திடுக்கிடும் தகவல்கள் .

நிர்மலா தேவி விவகாரத்தால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை மோடியிடம் தகவல் அளித்துள்ளதாக தெரிகிறது. மாணவிகளை தவறான பாதைக்கு இட்டுச்செல்ல முயன்ற நிர்மலா தேவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். இதில் பல்வேறு மர்மங்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் இந்த வழக்கு பற்றிய பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மாணவிகளிடம் நிர்மலா தேவி பேசிய ஓடியோவில் ஆளுநரை, குறிப்பிட்டு பேசும் வார்த்தைகள் பன்வாரிலால் புரோஹித்க்கு பெரும் சங்கடங்களை உருவாக்கியுள்ளது. சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோஹித் தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். தமிழக்கத்தில் முதல்வர் இருக்கும் போது ஆளுநர்கள் யாரும் இதுவரை தன்னிச்சையாக ஆய்வு செய்தது இல்லை என்ற மரபை உடைத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

தமிழக அரசின் ஆலோசனை இல்லாமல் தமிழக பல்கலைக்கழகங்களில் இதுவரை துணை வேந்தர்கள் யாரும் நியமிக்கப்பட்டதும் இல்லை, இந்த விவகாரத்திலும் புரோஹித் தமிழக அரசில் ஆலோசனை இல்லாமல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கத் தொடங்கினார். ஆளுநரின் ஆய்வுகள் மூலம் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர்.

ஆளுநர் தங்களை மதிக்காமல் செயல்படுவது தமிழக அரசுக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தினாலும் பிரதமர் மோடியின் சிபாரிசில் தமிழக ஆளுநர் வந்தவர் என்பதால் அனைத்தையும் பொருத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அரசு அமைதியாகவே இருந்தது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் தீவிரமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதை தடுக்க அரசு முயலவில்லை, தமிழக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர், தமிழக ஆட்சியாளர்கள் ஊழலில் திலைக்கின்றனர் என தமிழக அரசை பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு ரிப்போர்ட்டை கடந்த மாதம் டெல்லியில் மோடியிடம் கவரன்ர் புரோஹித் கொடுத்துள்ளார்.

இதனால் மேலும் கடுப்பான எடப்பாடி அரசு தமிழக ஆளுநரை அவர் போக்கிலேயே விட்டால் நிச்சயம் இந்த ஆட்சியை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமுல் செய்ய முயற்சிப்பார், எனவே இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்று குழப்பத்தில் இருந்த சமயத்தில் தான் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான ஓடியோ தமிழக உளவுத்துறைக்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன எனினும் இது குறித்து அப்போது எதுவும் பேசாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது நாற்காலிக்கு ஆபத்து வரும் போது இதன்மீது நடவடிக்கை எடுக்கலாம் என இந்த விவகாரங்களை கிடப்பில் போட்டுள்ளனர்.

இதற்கிடையே நிர்மலா தேவி விவகாரம் நினைத்தது போலவே பூதாகரமாகவே தமிழக ஆளுனர்களிலேயே முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஆளுநர் விளக்கம் அளிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதில் உண்மை நிலவரம் என்ன என அறிய நினைத்த மத்திய அரசு, தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் எப்படி என ஒரு ரிப்போர்ட்டை அளிக்கும் படி உளவுத்துறையிடம் கேட்டுகொண்டதன் அடிப்படையில், ரிப்போர்ட் தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஆளுநர் மாளிகையில் புரோஹித் தனது படுக்கையறையில் மாற்றங்கள் செய்ய செல்லியது முதல் மாளிகையில் உள்ள ஊழியர்கள் அவரைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது வரை அனைத்து உண்மை நிலவரங்களையும் மத்திய அரசிடம் உளவுத்துறை அளித்துவிடதாக கூறுகின்றனர். உளவுத்துறை மத்திய அரசிடம் அளித்த அந்த ஃபைலில் நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் அதிகமாக சித்தரிக்கப்படுகிறது, ஆனால் நிர்மலா தேவி விவகாரத்தில் சில உண்மைகளும் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக ஆளுநரை மத்திய அரசு மாற்றவும் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top