பள்ளி பேருந்து மீது பயங்கரமாக மோதிய ரயில்: 13 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழப்பு .

இந்தியாவில் பள்ளி பேருந்து மீது ரயில் பயங்கரமாக மோதிய விபத்தில் 13 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆளில்லா ரயில்வே கிராசிங்கை பள்ளி பேருந்து கடக்க முயன்ற போது வேகமாக வந்த ரயில் பேருந்து மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து உள்ளே இருந்த 13 மாணவர்கள் துடிதுடித்து உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எட்டு பேர் காயமடைந்துள்ளார்கள். இந்த கோர சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.