புனரமைக்கப்படுகிறது தியாகி திலீபன் நினைவுத் தூபி!

!
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பாக யாழ்ப்பாண மாநகர மேயர் இ.ஆனோல்ட் இன்று ஆராய்ந்துள்ளார். நல்லூர் பகுதியில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி, படையினரால் அழிக்கப்பட்டது. இந்த நிலையில் பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் வகையில் திலீபனின் தூபி அமைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திலீபன் நினைவேந்தலின் புதிய தூபியைத் திறக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்கப்படும் என யாழ். மாநகர சபை மேயர் தெரிவித்தார். யாழ். மாநகரசபையின் முதல் வேலைத் திட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளது.